அம்பானி வீட்டு திருமணம்
உலக பணக்காரர்களில் ஒருவர் அம்பானி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் இன்று பல கோடி சொத்துக்களுக்கு சொந்தமானவர். இவர் இந்த இடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணம் இவருடைய திறமை மற்றும் உழைப்பு தான்.
பல கோடி சொத்து இருந்தாலும் இன்றும் மற்ற மனிதர்களை மதிக்கும் குணம் கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகளும் உள்ளனர்.
சமீபத்தில், இவருடைய இளைய மகனான ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவிலும், பிரான்ஸிலிருந்து இத்தாலிவரை செல்லும் ஒரு சொகுசு கப்பலிலும் ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், விக்னேஷ் சிவன், நயன்தாரா, அட்லீ, அலியா பட், பிரியங்கா சோப்ரா என பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கங்கனா ரணாவத் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தது ஏன் என்பதை பற்றி பேசியுள்ளார்.
கங்கனா ரணாவத் விளக்கம்
அதில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நாள் அன்று என் தம்பியின் திருமணமும் நடைபெற இருந்ததால் என்னால் அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், நான் அதுப்பற்றி ஆனந்த் அம்பானியிடம் கூறினேன். அவர் உடனே என் நிலமையை புரிந்து கொண்டு என்னை வரவேண்டாம் என்று கூறினார் என கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் பிரபலங்களின் திருமணத்தில் கலந்து கொள்ள கூடாது என்ற முடிவில் உள்ளேன் என்றும், ஆனால் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஜோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனவும் கூறினார்.