ராயன்
தனுஷ் இயக்கி, நடித்துள்ள ராயன் படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்தும் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆறு நாட்கள் கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராயன் படம் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ராயன் தனுஷின் 50வது திரைப்படமாகும்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன். எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி என பலரும் நடித்திருந்தனர்.
மக்கள் இடையே முதல் நாளில் இருந்து ராயன் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ஆறு நாட்களில் ராயன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தெரியவந்துள்ளது.
வசூல்
அதன்படி, தனுஷின் இயக்கத்தில் இரண்டாவதாக வெளிவந்துள்ள ராயன் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 96 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும் 7 நாட்கள் முடிவில் இப்படம் ரூ. 100 கோடியை கடந்துவிடும் என உறுதியாக கூறப்படுகிறது. இதன்மூலம் தனுஷின் கேரியரில் மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக ராயன் அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.