அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தை தான் தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தெலுங்கு மாநிலங்கள் மட்டுமின்றி ஹிந்தியில் மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது புஷ்பா 2.
ஹிந்தியில் மட்டும் 375 கோடி ரூபாய் தற்போது வரை வசூலித்து இருக்கிறது இந்த படம்.
1000 கோடி
ஆறு நாட்களில் இந்த படம் 1000 கோடி என்ற பிரம்மாண்ட சாதனையை கடந்து இருக்கிறது. ஆறு நாட்களில் 1002 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
இவ்வளவு வேகமாக 1000 கோடி வசூலை தொட்ட படம் புஷ்பா 2 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.