Monday, April 14, 2025
Homeசினிமாஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட லால்பட்டா லேடீஸ் இந்த அரபிக் படத்தின் காப்பியா, வெடித்த சர்ச்சை

ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட லால்பட்டா லேடீஸ் இந்த அரபிக் படத்தின் காப்பியா, வெடித்த சர்ச்சை


லால்பட்டா லேடீஸ்

அமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் உருவாகி கடந்த 2024ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் லால்பட்டா லேடீஸ். இப்படத்தை அமீர் கான் தயாரித்து இருந்தார்.



இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக விமர்சன ரீதியாக இப்படம் கொண்டாடப்பட்டது. இப்படம் இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு விருதுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அரபிக் படத்தின் காப்பியா



கிரண் ராவ் இயக்கத்தில் உருவான லால்பட்டா லேடீஸ் திரைப்படம் 2019ம் ஆண்டு வெளிவந்த ‘புர்கா சிட்டி’ என்ற அரபு குறும்படத்தின் காப்பி என கூறி வருகிறார்கள்.

ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட லால்பட்டா லேடீஸ் இந்த அரபிக் படத்தின் காப்பியா, வெடித்த சர்ச்சை | Laapataa Ladies Accused As Copy Of Burqa City

பிரெஞ்சு திரைப்பட தயாரிப்பாளர் Fabrice Bracq இயக்கி, கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘புர்கா சிட்டி’ என்ற குறும்படத்திலிருந்து அதன் கருத்தை நகலெடுத்ததாக சர்ச்சை வெடித்துள்ளது. “இதை நீங்கள் எப்படி அழைப்பீர்கள், Inspiration or Copy? என கூறி, ரசிகர்கள் பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட லால்பட்டா லேடீஸ் இந்த அரபிக் படத்தின் காப்பியா, வெடித்த சர்ச்சை | Laapataa Ladies Accused As Copy Of Burqa City


இதற்கு லால்பட்டா லேடீஸ் படக்குழு என்ன பதிலளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments