இட்லி கடை
நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகம் காட்டி வருகிறார்.
பவர் பாண்டி, ராயன் போன்ற படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இயக்கியிருக்கும் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து 4வது படமாக இட்லி கடை என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது.
சம்பளம்
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
அருண்விஜய், ராஜ்கிரண், நித்யா மேனன் என பலர் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
தற்போது இப்படத்திற்காக தான் வாங்கும் சம்பளத்தை விட 3 மடங்கு அதிகமாக சம்பளம் அருண் விஜய் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக அருண் விஜய் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.