GOAT
தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.
புதிய கீதை படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து இப்படத்தில் தான் விஜய்யுடன் யுவன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து லைலா, சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாடல் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளைமாக்ஸ் காட்சி
இந்த நிலையில், GOAT திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதை நாம் அறிவோம். இதில் தந்தை விஜய்க்கும் மகன் விஜய்க்கும் ஏற்படும் சண்டை தான் கிளைமாக்ஸ் காட்சி என தகவல் தெரிவிக்கின்றனர்.