இந்தியன் 2
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தொடர்ந்து நிறைய படங்களை இயக்க கமிட்டாகியுள்ளார்.
தெலுங்கில் ராம் சரண் படம், பாலிவுட்டில் ரன்விர் சிங்குடன் ஒரு படம் என கமிட்டானவர் கடைசியாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை எடுத்து முடித்தார்.
படமும் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றதோடு செம பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனையும் பெற்று வருகிறது.
ஆனால் இன்னொரு பக்கம் சில மோசமான விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன.
பாபி சிம்ஹா
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடிகர் பாபி சிம்ஹாவும் முக்கிய வேடத்தில் நடித்தார்.
அண்மையில் ஒரு பேட்டியில் இவரிடம் இந்தியன் 2 படத்திந்கு வரும் மோசமான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், எல்லாருமே ரொம்ப அறிவாளினு நினைச்சுட்டு இருக்காங்க.
ஒரு விஷயம் நல்லா இருக்குன்னா, அதை நல்லா இருக்குன்னு சொல்லும்போது நம்மளை முட்டாளா நினைச்சிடுவாங்கன்னு ஏதோ ஒன்று பேசிட்டு இருக்காங்க.
அந்த அறிவாளிகளைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை, நம்மளுக்கு தேவை ஆடியன்ஸ், அவங்களுக்கு புரிஞ்சா போதும். தியேட்டர்ல மக்கள் கூட்டத்தை பார்த்தீங்கன்னா உங்களுக்கு தெரியும், நமக்கு அவங்கதான் தேவை.
அறிவாளிகள் தேவை கிடையாது, அந்த அறிவை வச்சுக்கிட்டு அவங்க அமைதியா இருக்கட்டும் என பேசியுள்ளார்.