ஜீ தமிழ்
சன் என்றால் சீரியல்கள், விஜய் டிவி என்றால் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெருமையை கொண்டது.
இந்த 2 தொலைக்காட்சிகளை தாண்டி ஜீ தமிழ் இரண்டிலும் பெஸ்ட் காட்டி முன்னேறி வருகிறது. சிறந்த சீரியல்கள், மக்களை என்டர்டெயின் செய்யும் வகையில் ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள்.
இதில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடர் டிஆர்பியில் டாப்பில் எல்லாம் வந்துள்ளது.
ஆனால் அந்த தொடருக்கு பிறகு எந்த சீரியலும் டாப்பிற்கு வரவில்லை.
முடியும் தொடர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் வள்ளியின் வேலன் என்ற புதிய தொடரின் புரொமோ வெளியாகி இருந்தது. இந்த நிலையில் முடிவுக்கு வரப்போகும் தொடரின் தகவலும் வெளியாகியுள்ளது.
அதாவது சமீபத்தில் இந்திரா தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வந்த நிலையில் தற்போது சண்டக்கோழி தொடரில் விரைவில் கிளைமேக்ஸை எட்ட இருப்பதாக கூறப்படுகிறது.