Saturday, March 22, 2025
Homeசினிமாஇந்த ஒரு விஷயம் தான் குட் பேட் அக்லி படத்தின் கதை.. இயக்குநர் ஆதிக் கூறிய...

இந்த ஒரு விஷயம் தான் குட் பேட் அக்லி படத்தின் கதை.. இயக்குநர் ஆதிக் கூறிய சீக்ரெட்


குட் பேட் அக்லி

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை எந்த அஜித் திரைப்படத்திற்கு இல்லாத அளவிற்கு இப்படத்தின் மீது ஏதிர்பார்பை ரசிகர்கள் வைத்து இருக்கிறார்கள். இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் படத்தின் கதை குறித்து பேசினார்.

ஆதிக் கூறிய சீக்ரெட்




“அவர் பெயர் ரெட் டிராகன்னுதான் ஸ்கிரிப்ட்டில் இருக்கிறது. பெயருக்கு ஆரம்பத்தில் நாங்கள் யோசிக்கவே இல்லை. பெயர் போடும்போது AK-ன்னு அவர் கிட்ட சொன்னதும் ஓகே சொன்னார். ஆனால் அது ரெட் டிராகன்தான். அது பாதுகாப்பும் கொடுக்கும், திருப்பியும் அடிக்கும். கூகுளில் தேடினால் ஆச்சர்யமான அதோட கேரக்டர் பார்க்க கிடைக்கும். டிராகன்னாலே பவர்தான், ரெட் டிராகன்னா இன்னும் பவர். அதோட கேரக்டர் மேட்ச், ஆனதால் அஜித் சார் கேரக்டர் ரெட் டிராகன் ஆகிவிட்டது”.

இந்த ஒரு விஷயம் தான் குட் பேட் அக்லி படத்தின் கதை.. இயக்குநர் ஆதிக் கூறிய சீக்ரெட் | Adhik Ravichandran Talk About Good Bad Ugly Story

அஜித் சாரின் கேரக்டர் எந்த அளவுக்கு மாஸா இருக்கோ, அதே அளவுக்கு எமோஷனல் கலந்தும் இருக்கும். அந்த எமோஷனல் பாயின்ட்தான் மொத்த கதைக்கான டிரைவ். முழுமையாக ஆக்ஷன் பண்ண முடியாது. பேமிலியாக பெரிதளவில் கனெக்ட் ஆவதற்கான இடங்கள் படத்தில் இருக்கின்றன. ஒரு அப்பாவுக்கும் பையனுக்குமான பிணைப்பும் படத்தில் இருக்கிறது” என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments