வைரல் புகைப்படம்
சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். ரசிகர்களிடையே வைரலாகும் புகைப்படங்களில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் உலா வருகிறது.
ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என கேட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகர் சிவகார்த்திகேயன் தான். ஆம், தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படம் தான் வைரலாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் இருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் எனும் அந்தஸ்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக அமரன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
இதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே. 23 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் வெங்கட் பிரபு, சிபி சக்ரவத்தி என தொடர்ந்து முக்கிய இயக்குனர்களுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.