வைரல் புகைப்படம்
ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படம் வைரலாகும். அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவரின் சிறு வயது போட்டோ வைரலாகி வருகிறது.
நயன்தாரா
அவர் வேறு யாருமில்லை நடிகை நயன்தாரா தான். ஆம், தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை நயன்தாராவின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நயன்தாரா நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கேஜிஎப் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திக்கான அறிவிப்பும் சமீபத்தில் தான் வெளிவந்தது. சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக நடித்து வந்தாலும், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அவ்வப்போது அந்த புகைப்படங்களும் நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.