வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது இந்திய சினிமாவின் வசூல் ராணியாக ரசிகர்களால் பார்க்கப்படுபவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
இவர் தனது திரையுலக பயணத்தை கடந்த 2006ம் ஆண்டில் இருந்து துவங்கியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் தனது பயணத்தை துவங்கியிருந்தாலும், இவருக்கு அடையாளம் கொடுத்தது பாலிவுட் சினிமா தான்.
முதல் ஹிந்தி திரைப்படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார். பாலிவுட்டில் கலக்கிக்கொண்டிருந்த இவர், ஹாலிவுட்டிற்கு சென்று வின் டீசலுக்கு ஜோடியாக நடித்தார்.
தீபிகா படுகோன்
அவர் வேறு யாருமில்லை நடிகை தீபிகா படுகோன் தான். ஆம், இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகை தீபிகா படுகோனின் சிறு வயது புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.
இவர் தனது திரை வாழ்க்கையில் நடித்த அனைத்து திரைப்படங்களின் மொத்த வசூலும் ரூ. 10 ஆயிரம் கொடுக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் தான் இவரை இந்திய சினிமாவில் வசூல் ராணி என கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.