நடிகை திவ்யபாரதி
நடிகை திவ்யபாரதி பேச்சிலர், மகாராஜா போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
திவ்யபாரதி பேட்டி
தற்போது, பிரபல நடிகையாக வலம் வரும் இவர் தனது கல்லூரி காலங்களில் உருவ கேலி கிண்டலுக்கு ஆளானார் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில், “நான் கல்லூரி படிக்கும்போது பலர் எனது உடல் அமைப்பை வைத்து நான் “எலும்புக்கூடு” போன்ற உடல் அமைப்பை வைத்துள்ளேன் என பல பயங்கரமான கமெண்ட்களை பெற்றுள்ளேன்.
இந்த காரணத்திற்காக நான் எனது உடல் அமைப்பை மிகவும் வெறுக்க தொடங்கினேன், மக்கள் முன்பு நடக்க கூட பயமாக இருந்தது அந்த அளவிற்கு இந்த கமெண்ட்கள் என்னை கடுமையாக பாதித்தது.
பிறகு, நான் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி அதில் என் புகைப்படங்களை பதிவிட்டேன் அதில் அனைவரும் என்னை பாராட்டினார்கள்.
அப்போது தான் எனக்கு இது போன்ற உடல் அமைப்பை வைத்திருப்பது பரவாயில்லை நாம் நம்மை நேசிக்க வேண்டும் என்று கற்று கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது இவருடைய கல்லூரி கால புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்,