வேட்டையன்
TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இன்று வெளியான படம் வேட்டையன்.
பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில், அனிருத் இசையமைப்பில் வெளியான ‘மனசிலாயோ’ பாடல் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் நட்சத்திரங்கள் என பலர் இந்த பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவிட்டிருந்தனர்.
நடனமாடிய நட்சத்திரங்கள்
இந்நிலையில், இன்று பெரும் ஆட்டம் பாட்டம் என மாஸாக வெளியான வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலுக்கு நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகைகள் கீர்த்தி பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா ஆகியோர் இணைந்து நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,