டெங்கு பரவலைத் தடுப்பதற்காக இன்று முதல் எதிர்வரும் 03 தினங்களுக்கு 08 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழைய மீண்டும் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
வீடுகள், பாடசாலைகள், பணியிடங்கள், தொழிற்சாலைகள், மத வழிபாட்டு இடங்கள் மற்றும் பொது இடங்களிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வீடுகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தம செய்யுமாறு சுகாதாரத் துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.