சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
இன்று தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது, பல கோடி ரசிகர்களை சம்பாதித்து புகழின் உச்சத்தில் ஜொலித்து கொண்டிருக்கிறார்.
ஆனால், சினிமாவில் இந்த இடத்தை அடைவதற்கு ரஜினிகாந்த் எதிர்கொண்ட கஷ்டங்கள் என்னென்ன தெரியுமா
ஆம், பல கஷ்டங்களை தாண்டி அவரது உழைப்பாலும், சினிமா மேல் உள்ள ஆசையாலும், குறிப்பாக அவர் நண்பன் செய்த உதவியாலும் தான் இன்று முன்னணி நடிகராக ரஜினிகாந்த் வலம் வருகிறார்.
ரஜினிகாந்த் வெற்றிக்கு காரணம்
ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக ரஜினிகாந்த் இருந்த போது மிகவும் ஸ்டைலாக இருப்பாராம். அதனை கண்டு ரஜினிகாந்த் நண்பர்கள், சக ஊழியர்கள் என அனைவரும் அவரை சினிமாவில் நடிகனாக சொல்லி கூறுவார்களாம்.
அதற்காக யாரும் ரஜினிகாந்துக்கு உதவ வில்லையாம். ஆனால், அவருடன் பேருந்தில் பணியாற்றிய டிரைவர் மற்றும் நண்பனாக இருந்த பகதூர் தான் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றி ரஜினி கையில் கொடுத்து சினிமாவில் சேர்வதற்காக படிக்க சொன்னாராம்.
சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்த் திரைத்துறையில் தொடர்ந்து ஜொலித்து கொண்டு இளம் கதாநாயகர்களுக்கு போட்டியாக சினிமாவில் வலம் வருவதற்கு அவர் நண்பர் பகதூருக்கும் பெரும் பங்கு உண்டு என கூறப்படுகிறது.