இந்தியன் 2
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடன கலைஞர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளிவ் களமிறங்கி தனது முழு திறமையை காட்டி இப்போது ரசிகர்களால் ஆண்டவர் என கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன்.
சினிமாவில் இப்போது புதியதாக பார்க்கப்படும் விஷயங்கள் பலவற்றை கமல்ஹாசன் எப்போதோ அவரது படங்களில் செய்துள்ளார். அவர் ஒரு சினிமா விக்கிபீடியா என நிறைய பேர் கூற கேட்டிருப்போம்.
இப்போது ஷங்கருடன் கூட்டணி அமைத்து இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார், படமும் இன்று ரிலீஸ் ஆகிவிட்டது.
சம்பளம்
இன்று இந்தியன் 2 படம் வெளியாகியுள்ளது, படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் குறித்து ஒரு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதில் இந்தியக் 2 படத்திற்காக கமல்ஹாசனுக்கு லைகா நிறுவனம் ரூ 150 கோடி சம்பளம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.