எஸ்.எஸ். ராஜமௌலி
இந்திய சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து சென்ற இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ். ராஜமௌலி. நான் ஈ, பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களின் மூலம் நம்மை வியந்து பார்க்க வைத்தார்.
ஆர்.ஆர்.ஆர் படம் உலகளவில் பிரபலமாகி அப்படத்தின் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வென்றது. அப்போது LA சென்றிருந்த இயக்குனர் ராஜமௌலி உலக புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அங்கு சந்தித்து பேசினார்.
புகழ்ந்து பேசிய ஜேம்ஸ் கேமரூன்
இருவரும் உரையாடிய வீடியோ கூட வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த நிலையில், சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலி குறித்து இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பேசியுள்ளார்.
இதில் “திரையுலகில் இயக்குனர் ராஜமௌலியால் எதை வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் இணைந்து செய்ய முடியும். அதற்கான மரியாதை அவரிடம் உண்டு”. என கூறியுள்ளார்.
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ’Modern Masters : ராஜமௌலி’ என்கிற ஆவணப்படம் உருவாகியுள்ளது. இதன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ், ராம் சரண் உள்ளிட்டோர் பேசியுள்ளனர்.