Thursday, September 19, 2024
Homeசினிமாஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் போலவே இருக்கும் நபர்! பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படம் வைரல்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போலவே இருக்கும் நபர்! பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படம் வைரல்


லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக மாறினார்.



இதை தொடர்ந்து கைதி படத்தை இயக்கினார். கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மாநகரம், கைதி என இரண்டு வெற்றிப்படங்களை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கைகோர்த்து மாஸ்டர் எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். இப்படத்தில் விஜய்யின் தோற்றத்தையும், நடிப்பையும் மாற்றி காட்டினார் லோகேஷ்.


இதன்பின் விக்ரம் மற்றும் லியோ என வசூல் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் கூலி இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போலவே இருக்கும் நபர்! பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படம் வைரல் | Person Look Alike Director Lokesh Kanagaraj

வைரல் புகைப்படம்


இந்த நிலையில், நடிகர் பிரஷாந்த் உடன் ரசிகர் ஒருவர் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பிரஷாந்த் உடன் இருக்கும் நபர் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் இயக்குனர் லோகேஷ் கனகராஜை போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


இதோ அந்த புகைப்படம்..



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments