கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை பிரபலமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். பாபி ஜான் படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாகவும் களமிறங்கியுள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது.
கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்கள் உள்ள நிலையில், புதிதாக அவர் கமிட்டாகியுள்ள திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
தனுஷ்
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனராக விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார். பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ், அதன்பின் சில ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு இயக்கிய படம் ராயன், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்கின்றனர்.
இப்படத்தையும் முடித்துவிட்ட தனுஷ், அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இயக்குனராக ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், நடிகராகவும் தனுஷ் கைவசம் சில படங்கள் உள்ளன.
2வது முறையாக இணையும் கூட்டணி
இந்த கமிட்மெண்ட்ஸ் அனைத்தையும் முடித்துவிட்டு, தனுஷ் இயக்கி நடிக்கப்போகும் 5வது திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என சொல்லப்படுகிறது. அதே போல் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம். கீர்த்தி சுரேஷ் – தனுஷ் இருவரும் இதற்கு முன் தொடரி படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.