Tuesday, April 1, 2025
Homeஇலங்கைஇறுதி போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனரெனில் பெயர் பட்டியல் எங்கே?

இறுதி போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனரெனில் பெயர் பட்டியல் எங்கே?


” படையினர் பெற்றுத்தந்த வெற்றியை நாம் ஒருபோதும் மறக்கவில்லை. எனவே, உள்ளக பொறிமுறை ஊடாகவேனும் எமது மக்களை தண்டிப்பதற்கு இடமளிக்கமாட்டோம்.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

” இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகவும், படையினர் 40 ஆயிரம் பேரை கொலை செய்தனர் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு படையினர் சட்டத்தக்கு புறம்பாக 40 ஆயிரம் பேரை கொலை செய்தனர் என்றால் பெயர் பட்டியல் எங்கே? வெளிநாடுகளில் உள்ளவர்களின் போலியான சாட்சியங்களின் அடிப்படையில் தகவல்களை வெளியிடுவதில் பயன் இல்லை.” எனவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.

இறுதிப்போரின்போது புலிகளிடமிருந்து 2 லட்சத்து 97 ஆயிரத்து 853 பேரை படையினர் மீட்டனர். இது தொடர்பான பெயர் பட்டியல் உள்ளது. ஆனால் ஆதாரம் இல்லாத 40 ஆயிரம் பற்றியே கதைக்கின்றனர்.

எனவே, இந்த பழிவாங்கலை , வேட்டையை நிறுத்த வேண்டும். எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஜேராமாவத்தைக்கு வருமாறு அனைவரையும் நாம் அழைக்கின்றோம்.

விஜித ஹேரத் தரப்பு கொண்டுவரவுள்ள உள்ளக பொறிமுறை ஊடாகவேனும் தண்டிக்க இடமளியோம்.” என விமல்வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments