Friday, April 11, 2025
Homeஇலங்கைஇலங்கைக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் – சஜித் பிரேமதாச கோரிக்கை

இலங்கைக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் – சஜித் பிரேமதாச கோரிக்கை


எதிர்க்கட்சித் தலைவர் மியன்மாரில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் இலங்கையும் நாட்டு மக்களும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) மியன்மார் தூதுவரிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தனது கடமைகளை உயரிய பட்சத்தில் நிறைவேற்றுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்  மியன்மார் தூதுவரிடம் வாக்றுதியளித்ததார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதரகங்களுக்கு விஜயம் செய்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தனது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்ததன் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

”எமது நாட்டு சம்புத்த சாசன முறையோடும் பௌத்த நாகரிகத்தோடும் மியான்மருக்கு மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதால்,
பொறுப்புள்ள பௌத்தர்களாக மதத்தின் பிரகாரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடியுமான நிவாரணத்தையும் முடியுமான ஒத்துழைப்புகளையும் பெற்றுத் தருவேன். மியன்மார் மக்களுக்கு இயன்ற உட்சபட்ச நிவாரணங்களையும், உதவுகளையும் வழங்குமாறு செல்வந்த நாடுகளிடமும் சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கை விடுக்கின்றேன்.” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments