தங்கலான்
கடந்த வாரம் வெளிவந்து வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவான இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது தங்கலான்.
வசூல்
இதுவரை உலகளவில் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இலங்கையில் தங்கலான் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தங்கலான் திரைப்படம் இலங்கையில் ரூ. 35 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு இலங்கையில் கிடைத்துள்ள சிறந்த வசூல் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.