நடிகர் ரவி மோகன் தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் பழங்கால தோற்றத்தில் இருக்கும் இடங்களில் ஷூட்டிங் நடத்தி வருகிறது படக்குழு.
இலங்கையில் பழமை மாறாமல் இருக்கும் இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா.
சந்திப்பு
இந்நிலையில் நடிகர் ரவி மோகன் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாவை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து இருக்கிறார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.