Wednesday, March 26, 2025
Homeஇலங்கைஇலங்கை – தாய்லாந்து அரசியல் ஆலோசனைகளின் ஆறாவது சுற்று நாளை மறுதினம்

இலங்கை – தாய்லாந்து அரசியல் ஆலோசனைகளின் ஆறாவது சுற்று நாளை மறுதினம்


இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான 06 அவது சுற்று இருதரப்பு அரசியல் கலந்துரையாடல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேங்கொக்கில் உள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தில் , இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் தாய்லாந்தின் வெளியுறவுத்துறை செயலாளர் எக்சிரி பின்தருச்சி ஆகியோர் இணைந்து இந்த ஆலோசனைகளுக்கு தலைமை தாங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி
மாதத்தில் முன்னாள் தாய்லாந்து பிரதமரின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ வருகைக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எதிர்வரும் ஆலோசனைக் கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்படும்.

இந்த ஆண்டு இலங்கையும் தாய்லாந்தும் இராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், அரசியல் ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்வளம் மற்றும் விவசாயத் துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த விவாதங்களில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments