தற்போது தெலுங்கு சினிமாவில் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிற ஸ்ரீலீலா. அவர் தமிழிலும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.
அவர் தமிழில் எப்போது என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அவர் தற்போது ஹிந்தியில் படம் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
பாலிவுட் என்ட்ரி
நடிகை ஸ்ரீலீலா ஹிந்தி ஹீரோ வருண் தவான் ஜோடியாக ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். ரமேஷ் தவ்ரானி அந்த படத்தை இயக்குகிறார்.
அதே படத்தில் நடிகை மிருனாள் தாகூரும் முக்கிய ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.