2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை நேற்று புதன்கிழமை (19.03.25) மாலை 4.15 நிலவரப்படி மொத்தமாக 107 அரசியல் கட்சிகளும் 49 சுயேச்சைக் குழுக்களும் சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை மார்ச் 17 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் ஆரம்பமான நிலையில் இன்று வியாழக்கிழமை (20.03.25) நண்பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது.
இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.