உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் கால அவகாசம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று 19ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணத்தை செலுத்தும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எந்த சூழ்நிலையிலும் கால அவகாசம் நீடிக்கப்படாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நாளை (20) நண்பகல் 12 மணியுடன் முடிவடையும்.
வேட்புமனுக்கள் மார்ச் 17 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு தாக்கலுக்கான கால எல்லை நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த பின்னர் 12 மணி முதல் 1.30 மணிவரை ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க தேர்தல் ஆணைக்குழு நேரத்தை ஒதுக்கியுள்ளது.
இந்த செயல்முறை முடிந்ததும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.