2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச சம்பவங்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் பதிவாகிய முறைப்பாடுகள் தொடர்பிலான அறிக்கையை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த 24ஆம் திகதி குற்றவியல் முறைப்பாடொன்றும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 06 முறைப்பாடுகளும் நேற்று (25) பதிவாகியுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட- முல்லேரியா பகுதியில் வாய்மொழி அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
மாத்தளை , பொமலுவ வீதி, அகலவத்தை வீதி மற்றும் ஹரஸ்கம வீதியின் ஓரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை தொடர்பில் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் யடவத்தை நகரிலும் பிரிதெவல வீதியிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்.
மஹவெல வீதி மற்றும் நிககொல்ல பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலையம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுரலிய பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலுவிஹாரய சமந்தாவ வீதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸ் நிலையம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.