உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பான முறைப்பாடுகளை அளிப்பதற்காக
புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிமுக நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
தற்போது முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் தேர்தல் முறைப்பாடுகளை அளிக்க EC EDR மொபைல் செயலி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் முறைப்பாடுகளை இந்த செயலி மூலம் அளிக்க முடியும் என்பதுடன் தங்கள் முறைப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையும் கண்டறிய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த செயலி மூலம் காணொளிகள் மற்றும் மற்றும் படங்களை வழங்கும் வசதியும் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.