எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் சரிவை சந்திக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருடைய பலவீனம் காரணமாகவே அந்த கட்சியிலிருந்து விலகினேன்.
நான் மட்டுமல்ல பலமானவர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர். எனக்குப் பின் கட்சி தவிசாளர் பதவியை ஏற்ற இம்தியாஸ் பக்கீர் மார்க்கரும் வெளியேறினார்.
அத்துடன், இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பலம் சஜித் பிரேமதாசவுக்கு இருப்பதாக நான் நம்பவில்லை” என்றார்.