Friday, March 14, 2025
Homeசினிமாஎதிர்நீச்சல் சீரியல் புகழ் மதுமிதாவின் புதிய தொடர்... சன் டிவி இல்லை, எந்த டிவி தொடர்...

எதிர்நீச்சல் சீரியல் புகழ் மதுமிதாவின் புதிய தொடர்… சன் டிவி இல்லை, எந்த டிவி தொடர் தெரியுமா?


எதிர்நீச்சல்

எதிர்நீச்சல், சன் தொலைக்காட்சியில் படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர்.

இதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இந்த தொடர் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனார், தொடருக்கு கூட அவரது கதாபாத்திரம் ஒரு பிரபலத்தை கொடுத்தது என்றே கூறலாம்.

ஆனால் தொடர் டிஆர்பியில் குறைந்து வர எப்போதோ முடிந்தும்விட்டது.


புதிய தொடர்

எதிர்நீச்சல் தொடரின் 2ம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது, ஆனால் இதில் யார் யார் மாறியுள்ளனர், முதல் பாகத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

எதிர்நீச்சல் சீரியல் புகழ் மதுமிதாவின் புதிய தொடர்... சன் டிவி இல்லை, எந்த டிவி தொடர் தெரியுமா? | Ethirneechal Fame Actress Madhumitha New Serial

இதில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வந்த மதுமிதா 2ம் பாகத்தில் இல்லை என்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் நடிகை மதுமிதா ஒரு புதிய தொடரில் கமிட்டாகியுள்ளாராம், அதுவும் சன் டிவி இல்லை விஜய் டிவி தொடராம்.

அய்யனார் துணை என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக இருக்கிறதாம்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments