Thursday, March 13, 2025
Homeசினிமாஎன்னது சுந்தரபாண்டியன் படத்தில் KGF யாஷ் நடித்துள்ளாரா.. புகைப்படத்தை பாருங்க

என்னது சுந்தரபாண்டியன் படத்தில் KGF யாஷ் நடித்துள்ளாரா.. புகைப்படத்தை பாருங்க


KGF யாஷ்

2022ல் மாபெரும் அளவில் பேசப்பட்ட திரைப்படம் KGF 2. 2020ல் வெளிவந்த KGF முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் 2022ல் KGF 2 வெளிவந்து, உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

கன்னட திரையுலகில், அதுவரை எந்த திரைப்படமும் செய்யமுடியாத வசூல் சாதனைகளை KGF 2 படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

KGF படம் வெளிவருவதற்கு முன் இந்தியளவில் நடிகர் யாஷ் யார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், தற்போது பான் இந்தியன் ஸ்டாராக தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

சுந்தரபாண்டியன்

தமிழில் சசிகுமார், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த திரைப்படம் சுந்தரபாண்டியன். நட்பை பற்றி பேசிய இப்படம் மக்கள் மத்தியில் வெற்றிபெற்றது. இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தையும் பிடித்துள்ளது.

என்னது சுந்தரபாண்டியன் படத்தில் KGF யாஷ் நடித்துள்ளாரா.. புகைப்படத்தை பாருங்க | Kgf Yash Acted In Sundarapandian Movie

இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார் என்பதை நாம் அறிவோம். ஆனால், KGF யாஷ் இப்படத்தில் நடித்துள்ளார் என்று சொன்னால் நம்புவீர்களா. ஆம், சுந்தரபாண்டியன் படத்தின் KGF யாஷ் நடித்துள்ளார்.

ஆனால், தமிழில் வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தில் அல்ல, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்ட சுந்தரபாண்டியன் படத்தில் KGF யாஷ் தான் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், சுந்தரபாண்டியன் கன்னட ரீமேக்கில் யாஷ் நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.. 

GalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments