நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஏற்கனவே தொடங்கி இருந்தாலும், அதன் கொள்கைகள் என்ன என்பதை பற்றி சொல்லாமல் இருந்தார்.
அதை சொல்வதற்காக விஜய் ஏற்பாடு செய்து இருந்த பிரம்மாண்ட மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடந்து இருக்கிறது.
அதில் பேசிய விஜய் ஆவேசமாக ஒரு விஷயத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.
சம்பளத்தை விட்டுட்டு வந்திருக்கேன்..
“என் கெரியரின் உச்சத்தை,.. எப்படி.. உச்சத்தை உதறிட்டு. அந்த ஊதியத்தை உதறிவிட்டு வந்திருக்கிறேன். உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கேன்” என விஜய் கூறி இருக்கிறார்.
மேலும் 2026 தேர்தலில் தான் தனித்த மெஜாரிட்டி உடன் ஜெயிப்பேன் என நம்பிக்கை இருப்பதாகவும் கூறி இருக்கிறார் அவர்.