ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் என்றால் அது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து குறித்து தான்.
நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு பல சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக இந்த விவாகரத்து குறித்து ஆர்த்தி தனக்கு எதுவும் தெரியாது என அறிவித்ததை தொடர்ந்து ஜெயம் ரவி மேல் பல குற்றச்சாட்டுகள் போடப்பட்டது.
ஜெயம் ரவியின் காரணம்
இந்நிலையில், ஜெயம் ரவி தன் பக்கம் உள்ள கருத்தை வெளிப்படையாக பேசி கொண்டு வருகிறார்.
ஜெயம் ரவி இது குறித்து பேசுகையில், “இந்த விவாகரத்து குறித்து எதுவும் தெரியாது என ஆர்த்தி சொல்வது எல்லாம் பொய். இந்த முடிவு எடுத்த பிறகு நான் விவாகரத்து நோட்டீஸ்சை அவர்களுக்கு இரண்டு வாட்டி அனுப்பினேன் அதை பெற்று கொண்டு கையெழுத்து போட்ட பிறகு தான் நான் என் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன்.
மேலும், நான் என் குழந்தைகளை தனியாக விட்டு சென்றதாக கூறினார். என்னுடைய ஒரு மகன் பிறந்தநாள் அன்று நான் ஹோட்டலில் இவர்களுக்காக காத்துகொண்டு இருந்தேன் ஆனால் அதை தெரிந்து ஆர்த்தி என் குழந்தைகளை கூட்டி கொண்டு இலங்கை சென்று விட்டார்.
நாங்கள் திருமணமாகி இந்த 13 ஆண்டுகளாக எனக்கென்று தனியாக வங்கியில் கணக்கு கிடையாது. நான் எந்த செலவு செய்தலும் அதற்கு கணக்கு கேப்பார் ஆனால், ஆர்த்தி தன் இஷ்டம் போல் செலவு செய்வார்.
எனக்கு அந்த வீட்டில் எந்த மரியாதையும் இல்லாமல் போனதால் தான் இந்த முடிவு எடுத்தேன்” என இதுகுறித்து ஜெயம் ரவி rj sha- விடம் தெரிவித்துள்ளார் அதனை sha தனது “யூடியூப்” பக்கத்தில் பேசியுள்ளார்.