ஸ்ருதி ஹாசன் நடிகர் கமல்ஹாசனின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமா துறையில் அறிமுகம் ஆனவர். தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவர் அடுத்து ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ருதிஹாசன் இதற்கு முன் சாந்தனு ஹசாரிகா என்பவர் உடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால் அவர்கள் திடீரென பிரேக்கப் செய்து கொண்டு பிரிந்துவிட்டனர்.
திருமணம் செய்ய மாட்டேன்
ஸ்ருதி ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என கூறி இருந்தார். அது பற்றி கேட்டதற்கு தான் தற்போதும் அந்த முடிவில் இருந்து மாறவில்லை என கூறி இருக்கிறார்.
திருமணம் செய்வதை விட ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையே விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.
“என் வாழ்க்கையில் திருமணமே செய்யமாட்டேன் எனவும் கூறமாட்டேன். Never என்ற வார்த்தையை என்னால் சொல்ல முடியாது. வாழ்க்கை என்பது unpredictable. அதனால் ஸ்பெஷலான ஒருவர் வந்தால் அதை பற்றி யோசிக்கலாம். ஆனால் அது நடக்கும் என எனக்கு தோன்றவில்லை” என ஸ்ருதி ஹாசன் கூறி இருக்கிறார்.