Friday, March 14, 2025
Homeசினிமாஏ.ஆர்.ரகுமானை பிரிவது இதனால் தான்.. மனைவி சாய்ரா பானு முதல் முறையாக அளித்த விளக்கம்

ஏ.ஆர்.ரகுமானை பிரிவது இதனால் தான்.. மனைவி சாய்ரா பானு முதல் முறையாக அளித்த விளக்கம்


ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமா கொண்டாடும் பிரபலமாக உள்ளார்.
எந்த ஒரு நிகழ்ச்சி வந்தாலும் ஒரு அமைதி, அடக்கம் என தான் ஒரு பெரிய பிரபலம் என்பதை மறந்து சாதாரணமாக மக்களோடு மக்களாக பயணிப்பார்.

இவர் தனது மனைவி சாய்ராவை 29 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்வதாக அறிவிப்பு வந்த பின் ஏ.ஆர்.ரகுமான் குறித்து பலரும் தவறாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சாய்ரா விளக்கம்

இந்நிலையில், சாய்ரா விவாகரத்து பிரச்சனை குறித்தும் ஏ.ஆர்.ரகுமான் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “கடந்த 2 மாதமாக உடல்நலக்குறைவால் மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.

எனது உடல்நல கோளாறு யாருக்கும் பிரச்சனையாக இருந்துவிட கூடாது என்றும் எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரகுமானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன்.

ஏ.ஆர்.ரகுமானை பிரிவது இதனால் தான்.. மனைவி சாய்ரா பானு முதல் முறையாக அளித்த விளக்கம் | Rahman Wife Explained About Divorce

எங்கள் பிரிவு குறித்து யாரும் தவறான, கீழ்தரமான கருத்துக்களை பரப்ப வேண்டாம். ஏ.ஆர்.ரகுமான் உலகிலேயே தலைசிறந்த மனிதர்
எங்கள் இருவருக்கும் தற்காலிகமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டதால் பிரிந்து இருக்கிறோம்.

விரைவில் என் உடல்நிலையை சரி செய்து விட்டு நான் சென்னை திரும்புவேன். எதையும் நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments