ஐஸ்வர்யா ராய்
உலகளவில் பிரபலமான இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் வென்ற இவர் தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தார்.
பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தமிழில் ராவணன், எந்திரன், ஜீன்ஸ், பொன்னியின் செல்வன் என சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபகாலாமாக ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை இருவரும் விவாகரத்து பெறப்போகிறார்கள் என பல விதமான வதந்திகள் உலா வருகிறது. ஆனால், இது உண்மையில்லை பொய்யான தகவல்கள் என கூறப்படுகிறது.
திருமண வாழ்க்கை நீடிக்காது
இந்த நிலையில் பழைய விஷயம் ஒன்று தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு அபிஷேக் பச்சம் தனது மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் தனது 15வது திருமண நாள் கொண்டாட்டம் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது, நடிகை நிம்ரத் கவுர் திடீரென குறுகிட்டு ‘உங்கள் திருமண வாழ்க்கை நீடிக்காது’ என கூறியுள்ளார்.
இதனால் அபிஷேக் பச்சம் கடும் கோபமடைந்துள்ளார். மேலும் அதே இடத்தில கோபமாக அவரை பார்த்து நன்றி என கூறினாராம். இந்த தகவல் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.