Tuesday, April 8, 2025
Homeஇலங்கைஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் – சந்தேகநபர் கைது

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் – சந்தேகநபர் கைது


முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குடபட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச்சேர்ந்த இருபெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்துமுரண்பாட்டையடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில்வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்டபெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகியிருந்தார்.

இத்தகையசூழலில் குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பெண்ணை தாக்கிய நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்குமுன்பாக அப்பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த இடத்திற்குவிரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய குறித்த நபர் உடனடியாகக் கைதுசெய்யப்படவேண்டுமென பொலிஸாரிடம் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய 24 மணிநேரத்திற்குள் குறித்த நபர் கைதுசெய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடமும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதமளித்திருந்தனர்.

இதன்படி, குறித்த நபர் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments