அரசியலமைப்பின் 79 ஆவது சரத்திற்கு அமைய, 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன நேற்று இரவு (21) கையொப்பமிட்டுள்ளார்.
சட்டமூலம் தொடர்பான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று இரவு 7.00 மணி வரை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்டப் பின்னர் சபாநாயகரால் கையொப்பமிட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.