ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் ஷாருக்கான். இவரின் நடிப்பு மற்றும் அழகு மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இன்றும் பல இளம் நடிகர்களுக்கு போட்டியாக இவர் வலம் வருவதற்கு முக்கிய காரணம் இவருடைய உழைப்பும், நடிப்பு திறமையும் தான்.
கடந்த ஆண்டு இவர் நடித்து வெளிவந்த பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. இதை தொடர்ந்து, ஷாருக்கான் சமீபத்தில், சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் நடைபெற்ற 77வது பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.
ஒரு வேளை தான் சாப்பாடு
இவ்வாறு புகழின் உச்சத்தில் இருக்கும் ஷாருக்கான், சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் ஒரு வேளை மட்டும்தான் சாப்பிடுவதாக கூறியுள்ளார். அதில், ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்கு இரவு 2 மணிக்கு வருவேன் என்றும், பிறகு மூன்று மணி நேரம் ஒர்க் அவுட் செய்வேன் என்றும் காலை 5 மணி அளவில் தூங்குவேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தினமும் ஒரு வேளை தான் நான் சாப்பிடுவேன் என்றும், அது எனது விருப்பம் என்றும் கூறினார். இந்த நிலையில், இவர் ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.