ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 500 விசேட அதிரடிப்படை உறுப்பினர்களை ஈடுபடுத்த எதிர்ப்பார்ப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய உறுப்பினர்கள் தங்கள் படிப்புகளை நிறைவு செய்து விரைவில் சேவைக்கு வருகை தருவார்கள் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதேவேளை, தென் மாகாணத்தில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அம்பலாங்கொடை பிரதேசத்திலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்காக இரு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.