கஜினி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கஜினி. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அசின் ஜோடியாக நடித்திருப்பார்.
வித்தியசமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. இன்று வரை சூர்யாவின் சிறந்த நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் சிக்கந்தர். இப்படத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது.
கஜினி 2
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் பங்கேற்ற இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் கஜினி 2 குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முருகதாஸ் “என்னிடம் சில யோசனைகளை உள்ளது. இதுகுறித்து விவாதித்தோம். அனைவருமே அவர்களுடைய படங்களில் மும்முரமாக இருக்கிறோம். நேரம் அமையும்போது அமர்ந்து பேசி முடிவு எடுப்போம்” என கூறியுள்ளார்.
கஜினி 2 படம் குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசிய விஷயம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.