Thursday, March 13, 2025
Homeசினிமாகடந்த காலத்தில் சில தவறுகள் செய்துள்ளேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை சமந்தா

கடந்த காலத்தில் சில தவறுகள் செய்துள்ளேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை சமந்தா


நடிகை சமந்தா 

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் சமந்தா.

முதலில் மாடலிங் துறையில் நுழைந்து ரூ. 500 சம்பளம் வாங்கியவர் அப்படியே நாயகியாக நடிக்க தொடங்கி இப்போது அசுர வளர்ச்சி கண்டு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

உடல் நல குறைவால் சற்று நடிப்பில் இருந்து விலகி இருந்த சமந்தா மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார்.

தற்போது, சமந்தா Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் ஒன்றில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த காலத்தில் சில தவறுகள் செய்துள்ளேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை சமந்தா | Samantha Talk About Her Flop Movie

இந்த வெப் தொடர் வரும் 7 – ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இவர் நடிப்பில் வெளியான ‘சாகுந்தலம்’, ‘குஷி’ , ‘யசோதா’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது.

சமந்தா கருத்து 

இந்நிலையில், இந்த பின்னடைவு குறித்து சமந்தா பகிர்ந்துள்ளார். அதில், ” உண்மை தான் நான் கடந்த காலத்தில் சில தவறுகளை செய்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

சில விஷயங்கள் எனக்கு சரியாக அமையவில்லை, தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.    

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments