நடிகை சமந்தா
நடிகை சமந்தா, பல்லாவரத்து பொண்ணு என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம்.
மாடலிங் துறையில் ரூ. 500க்கும் பணிபுரிய தொடங்கி இப்போது பல கோடி சம்பளம் வாங்கும் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர் இப்போது பாலிவுட்டிலும் தொடர்ந்து டிநக்க தொடங்கியுள்ளார்.
இடையில் அவர் மயோசிடிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட படங்கள் கமிட்டாகாமல் சிகிச்சையில் இருந்தார். இப்போது ஓரளவிற்கு குணமடைந்த சமந்தா நிறைய சுற்றுலா செல்வது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருக்கிறார்.
செய்த தவறு
சமந்தா ஃபிட்னஸ் பயிற்சியாளர் அல்கேஷ் ஷரோத்ரியுடன் இணைந்து டேக் 20 என்ற பெயரில் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களைப் பேசி வருகிறார்.
அப்படி சமீபத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் சிலவகை உணவுகள், பானங்களை தவிர்ப்பது குறித்தும் விளக்கினார். அப்போது ஒருவர், ஆரோக்கியமற்ற பிராண்ட் ஒன்றில் சமந்தா விளம்பர தூதராக இருந்தது பற்றி கேட்டிருந்தார்.
அதற்கு சமந்தா, கடந்த காலத்தில் அந்தத் தவறை செய்தது உண்மைதான், வேண்டும் என்றே செய்யவில்லை, தெரியாமல் செய்த தவறு அது.
உண்மை தெரிந்த பிறகு அதுபோன்ற விஷயங்களை விளம்பர படுத்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன், இப்போது விழிப்பாக இருக்கிறேன் என பேசியுள்ளார்.