லப்பர் பந்து
சமீபத்தில் வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை மக்கள் தற்போது கொண்டாடி வரும் நிலையில், உலகளவில் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான இப்படம் ரூ. 5.5 கோடியில் உருவானது என்றும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் இளம் நடிகை சஞ்சனா.
இவர் இதற்கு முன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்த ‘வதந்தி : The Fable of Velonie’ எனும் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதன்பின் இவர் நடித்து திரைக்கு வந்த படம் லப்பர் பந்து.
துணை இயக்குனரான நடிகை சஞ்சனா
இந்த நிலையில், கதாநாயகியாக நடித்த நடிகை சஞ்சனா தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் துணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளாராம். சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே மணி சாரின் துணிய இயக்குனராக பணிபுரிந்தேன் என சஞ்சனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.