கருடன் படம்
எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு படங்களை இயக்கி பிரபலமான துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிப்பில் தயாரான படம் கருடன்.
இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைக் கோகி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க கடந்த மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது.
கதைக்களம் மாஸாக அமைய படம் ரூ. 50 கோடி வசூலை நெருங்கியுள்ளது. விரைவில் ஓடிடியில் அமேசான் பிரைம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகருக்கு பரிசு
கருடன் படம் மாபெரும் வெற்றியடைய தற்போது இப்பட தயாரிப்பு குழு லார்க் ஸ்டுடியோஸ் சூரிக்கு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு காரை பரிசாக கொடுத்துள்ளார்களாம்.
இதன்விலை கிட்டத்தட்ட ஒன்றரை கோடியில் ஆரம்பித்து ரூ. 4 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.