கருடன்
துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கருடன். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் உன்னி முகுந்தன்.
இவர் தனுஷின் சீடன் படத்தின் மூலம் நடிகராக தமிழில் அறிமுகமானார். பின் மலையாள திரையுலகம் பக்கம் சென்ற இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து கருடன் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளார்.
கருடன் படத்தின் வெற்றி நடிகர் உன்னி முகுந்தனுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் இனி பல படங்களில் நடிக்க ஆசை என அவர் கூறியுள்ளார்.
First லுக்
இந்த நிலையில், உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்து அடுத்ததாக வெளிவரவிருக்கும் மார்கோ எனும் திரைப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வெறித்தனமாக இருக்கும் இந்த போஸ்டரை கருடன் படத்தின் இயக்குனர் துரை செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#KARUNA is back with a bang 🔥
When their REASONS ended, His KNIFE began🔪🩸#Marco #KillingSoon #MarcoFirstLook @Iamunnimukundan #ShootInProgress@Haneef_Adeni#ShareefMuhammed@RaviBasrur Musical #AbdulGadhaf#CubesEntertainments@UMFPvtLtd pic.twitter.com/WbpQwzhEtp
— durai senthilkumar (@Dir_dsk) June 16, 2024