ரோபோ சங்கர் – இந்திரஜா சங்கர்
சின்னத்திரையில் அறிமுகமாகி பின்பு, வெள்ளி திறைக்கு முன்னேறி பல முன்னணி கதாநாயகர்கள் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து தற்போது திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர்.
இவருக்கு இந்திரஜா என்ற ஒரே மகள் உள்ளார்.
நடிகர் விஜய் நடித்து வெளிவந்த பிகில் திரைப்படத்திலும் பாண்டியம்மா என்ற கேரக்டரில் இந்திரஜா நடித்து தனக்கென ஒரு இடத்தை திரையுலகில் பதித்தார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு இந்திரஜா சினிமாவில் பெரிய அளவில் நடிக்கவில்லை.
இந்த நிலையில், இந்திரஜாவிற்கு அவருடைய மாமாவான கார்த்திக்குடன் திருமணம் நடைபெற்றது. ஒரு பக்கம் இவர்கள் திருமண செய்தி இணையத்தில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. ஆனால், மறுபக்கம் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்கள் திருமணம் பலரையும் வியக்க வைத்தது. இந்த திருமணத்தில் பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்தார்.
அதற்கான ப்ரோமோ வெளியாகி பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
மதுரைக்கு சென்ற இந்திரஜா
பிறகு இருவரும் தன் சொந்த ஊரான மதுரைக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இந்திரஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.
அதோடு இந்திரஜா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஆமாம் நாங்கள் இருவரும் அப்பா அம்மாவாக மாறுகிறோம். இந்த பயணம் முழுவதும் உங்கள் அனைவரின் பிரார்த்தனையில் எங்களை வைத்திருங்கள். இப்போது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டு விடாதீர்கள் எனவும் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும், என்னுடன் எப்போதும் இருப்பதற்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
இந்த செய்திக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.