கத்ரீனா கைஃப்
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல்.
இவர்கள் கடந்த 2021ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் தி சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
திருமனத்திற்கு பிறகும் கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல் இருவருமே சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
கர்ப்பமா?
சமீபத்தில் கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளிவந்துகொண்டு இருந்தது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விக்கி கௌஷலிடம், கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் பரவும் தகவல் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு, “சரியான நேரத்தில் நல்ல செய்தியை உலகத்துடன் பகிர்ந்து கொள்வேன்” என்று விக்கி கௌஷல் தெரிவித்துள்ளார்.